5 ஆண்டுகள் துவைக்காத தலையணை உறையை பயன்படுத்திய பெண்ணுக்கு நேர்ந்த கதி
சீனாவைச் சேர்ந்த பெண் ஒருவர் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளாக, தனது தலையணை உறையை துவைக்காமல் பயன்படுத்தி இருக்கிறார். இவரின் இந்த செயலால் அவருக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்பட இருந்தது.
சீனாவை சேர்ந்த பெண் ஒருவருக்கு தொடர்ந்து கண் எரிச்சல், கண்ணில் நீர்வடிவது, போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து அவர் மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார் . டாக்டர்கள் செய்த பரிசோதனையில் அவரது கண்களில் நூற்றுக்கணக்கான ஒட்டுண்ணிகள் இருப்பது தெரியவந்திருக்கிறது.
இது போன்ற ஒட்டுண்ணிகள் சாதாரணமானது தான். ஆனால் இவரின் கண்களில் இருக்கும் ஒட்டுண்ணிகளின் எண்ணிக்கை மிக அதிகம். இதை தொடர்ந்து கவனிக்காமல் இருந்திருந்தால், மிகப்பெரிய பிரச்சனையாகி இருந்திருக்கும் எனத் தெரிவித்திருக்கின்றனர், அந்த சீனப்பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள்.
பொதுவாக ஒரு தலையணையை 2 முதல் மூன்று ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம். அதிவும் அவ்வப்போது வெயிலில் இட்டு உலர்த்தி, சுத்தமாக துவைத்த தலையணை உறைகள் இட்டு பயன்படுத்த வேண்டும். ஆனால் இந்த சீனப்பெண், ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக துவைக்காத தலையணை உறையை பயன்படுத்தி இருக்கிறார்.
இதனை தொடர்ந்து அவருக்கு சுத்தத்தை பற்றி பாடம் எடுத்ததோடு, கண்ணுக்கு மருந்தும் கொடுத்து அனுப்பியிருக்கின்றனர் சீன மருத்துவர்கள். தலையணைகள் மற்றும் படுக்கையை சுத்தமாக வைத்துக்கொள்ளவில்லை என்றால், சுவாசம் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் தோல் வியாதிகள் ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது.