ஆரஞ்சு பனி? - ஐரோப்பாவின் சஹாரா, சைபீரியாவில் அரிய நிகழ்வு
ஐரோப்பாவின் சஹாரா, சைபீரியாவில் அரிய நிகழ்வுவாக ஆரஞ்சு பனி பொழிவு ஏற்பட்டது. #OrangeSnow #Europe
பூஸாரெஸ்ட்,
சைபீரியா மற்றும் சஹாராவின் அரிய நிகழ்வாக கிழக்கு ஐரோப்பாவின் சில பகுதிகளில் இந்த ஆரஞ்சு பனி பொழிவு ஏற்பட்டது.
ரஷ்யாவின் சோச்சி பிராந்தியத்தில் மலைகளில் இந்த ஆரஞ்சு பனி காணப்பட்டது. மேலும் கிழக்கு ஜார்ஜியாவின் அட்ஸாரியா பிராந்தியத்திலும், காலாட்டியில் உள்ள ருமேனியாவின் டான்யூப் துறைமுகத்திலும் காணப்பட்டது.
ஆப்பிரிக்காவில் சஹாரா பாலைவனத்தில் இருந்து தூசி நிரம்பிய காற்றுடன் சைபீரியாவில் இருந்த பனிக்கட்டிகள் மீது மோதியதால் இந்த ஆரஞ்சு நிற பனி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதை சமூக ஊடகங்களில் பார்த்த சிலர், இது ஒரு மலை அல்ல, செவ்வாய் கிரகத்தில் இருக்கும் ஒரு பகுதி என்று கேலியாக குறிப்பிட்டுள்ளனர்.
சகாராவில் இருந்து மணல் துகள்களை சுமந்து செல்லும் காற்றானது கடந்த வெள்ளியன்று இந்த பனிப்பொழிவை சந்தித்துள்ளது என ரோமானிய வானியல் ஆராய்ச்சியாளர் மியா மிராபிலா ஸ்டாமேட் தெரிவித்துள்ளார். மேலும் இந்த ஆரஞ்சு நிறமுடைய பனி கிழக்கு நோக்கி நகர கூடும் என அவர் கணித்துள்ளார்.