ஏசுநாதர் ஓவியம் ரூ.2,925 கோடிக்கு ஏலத்தில் விற்பனை

உலக பிரசித்தி பெற்றவர், இத்தாலி ஓவியர் லியனார் டா டாவின்சி. 1519–ல் மரணம் அடைந்து விட்ட இவரது 20 ஓவியங்கள்தான் இப்போது உலகில் இருப்பதாக நம்பப்படுகிறது.

Update: 2017-11-16 22:30 GMT

நியூயார்க்,

லியனார் டா டாவின்சி 1505–ம் ஆண்டுக்கு பின்னர் வரைந்ததாக நம்பப்படுகிற ஒரு ஓவியம் ‘உலக ரட்சகர்’. ஏசுநாதர் தனது வலது கரத்தை உயர்த்தி ஆசி வழங்குவதுபோல இந்த ஓவியம் அமைந்துள்ளது.

இந்த ஓவியம், நியூயார்க் நகரில் உள்ள பிரபல ஏல விற்பனை நிலையமான கிறிஸ்டீஸ் நிறுவனத்தில் ஏலம் விடப்பட்டது. இந்த ஓவியத்தின் ஏலம் 100 மில்லியன் டாலரில் தொடங்கியது. இறுதியில் 400 மில்லியன் டாலர் ஏலம் போனது. ஆனால் எல்லா கட்டணங்களையும் சேர்த்து இதன் விலை 450 மில்லியன் டாலர் (சுமார் ரூ.2,925 கோடி) ஆகும்.

இதை தொலைபேசி வழியாக ஏலம் கேட்டு வாங்கியவரின் பெயர் வெளியிடப்படவில்லை. இந்த ஏல விற்பனை 20 நிமிடங்களில் முடிந்து விட்டது.

மேலும் செய்திகள்