அடால்ப் ஹிட்லர் இரண்டாம் உலகப்போர் காலக்கட்டங்களில் பயன்படுத்திய டெலிபோன் ரூ. 1.63 கோடிக்கு ஏலம்
சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லர் இரண்டாம் உலகப்போர் காலக்கட்டங்களில் பயன்படுத்திய ‘கொலைகார தொலைபேசி ரூ.1,63 கோடிக்கு ஏலம் போனது
ஜெர்மனி நாஜி சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லர் இரண்டாம் உலகப்போர் காலக்கட்டங்களில் பயன்படுத்திய டெலபோன் ரூ. 1.63 கோடிக்கு ( 2,43,000 டாலர்கள்) ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஏலம் அமெரிக்காவில் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த ‘கொலைகார தொலைபேசி’-யை அதிக தொகை கொடுத்து ஏலம் எடுத்தவரின் பெயர் சில காரணங்களினால் வெளியிடப்படவில்லை.
இந்தப் போனில் நாஜி தலைவரின் பெயரும் ஸ்வஸ்திக் குறியீடும் பொறிக்கப்பட்டுள்ளது. இந்தப் போனை சோவியத் ராணுவ வீர்ர்கள் பிரிட்டன் அதிகாரி சர் ரால்ப் ரேய்னரிடம் அளித்துள்ளனர்.
சர் ரேய்னர் ஹிட்லர் கடைசி காலங்களில் பதுங்கியிருந்த பதுங்கு குழியிலிருந்து இந்தப் போனை எடுத்துள்ளார். இதனை ரேய்னரின் இறப்புக்குப் பிறகு அவரது மகன் ரேனல்ஃப் ரேய்னர் பாதுகாத்து வந்தார்.
முதலில் இது கறுப்பு வண்ணத்தில்தன இருந்தது, பிறகு இது சிகப்பு கலராக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதே ஏலத்தில் ஹிட்லர் வளர்த்ததாகக் கருதப்பட்ட அல்சேஷன் நாயின் பீங்கான் வார்ப்புருவத்தை வேறு ஒருவர் 24,300 டாலர்களுக்கு வாங்கினார்.ஹிட்லர் பயன்படுத்திய இந்த டெலிபோன் ‘அனைத்து கால மிக பயங்கரமான ஆயுதம்’ என்று வர்ணிக்கப்படுகிறது.