ஆப்கானிஸ்தானில் தொண்டு நிறுவனம் வழங்கிய உணவை சாப்பிட்ட 200 பேர் மயக்கம்
சுமார் 200 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
காபூல்,
கிழக்கு ஆப்கானிஸ்தானின் கோஸ்ட் மாகாணம் சட்காய் பகுதியில் தொண்டு நிறுவனம் ஒன்று செயல்படுகிறது. அதன் சார்பில் அங்குள்ள பொதுமக்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டது. இதனை வாங்கி சுமார் 500 பேர் சாப்பிட்டனர். ஆனால் சாப்பிட்ட சிறிது நேரத்தில் சிறுவர்கள் உள்பட பலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அதன்படி சுமார் 200 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.