கனடாவில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவு

கனடாவில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவானது.

Update: 2024-09-16 09:51 GMT

ஒட்டாவா,

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் நேற்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. ஹைடா குவாய் நகரை மையமாக கொண்டு 33 கிலோமீட்டர் ஆழத்தில் நேற்று மாலை (அந்நாட்டு நேரப்படி) 3.20 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன.

இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட அரைமணிநேரம் கழித்து மீண்டும் லேசான நில அதிர்வு ஏற்பட்டது. இந்த நில அதிர்வு ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவானது.

அடுத்தடுத்து நடந்த இந்த நிலநடுக்கத்தால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்