அமெரிக்காவில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி 2 போலீஸ் அதிகாரிகள் சாவு
அமெரிக்காவில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி 2 போலீஸ் அதிகாரிகள் உயிரிழந்தனர்.
அமெரிக்காவின் லூசியானா மாகாண தலைநகர் பேடன் ரூஜில் குற்ற வழக்கில் தேடப்பட்டு வந்த நபர் ஒருவர் காரில் தப்பி சென்ற நிலையில், காவல்துறைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று அந்த காரை விரட்டி சென்றது. ஹெலிகாப்டரில் 2 போலீஸ் அதிகாரிகள் இருந்தனர்.
பேடன் ரூஜ் நகரின் மேற்கு பகுதியில் பறந்து கொண்டிருந்தபோது ஹெலிகாப்டர் திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது. தொடர்ந்து அங்குள்ள வயல்வெளியில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது. இதில் ஹெலிகாப்டரில் இருந்த 2 போலீஸ் அதிகாரிகளும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.