குவாட்டில் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் எந்த திட்டமும் இல்லை: அமெரிக்கா அறிவிப்பு
குவாட்டின் பலத்தை உறுதிசெய்வதில் உறுப்பினர்கள், கவனம் செலுத்துகிறார்கள் என அவர் கூறினார்.;
வாஷிங்டன்,
குவாட் குழுவில் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் திட்டம் எதுவும் இல்லை என்று அமெரிக்காவின் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன், ஜப்பான் பிரதமர் யோஷிஹிட் சுகா, இந்தியாவில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் - ஜூன் 24 அன்று ஆஸ்திரேலியாவில் நடைபெறும் குவாட் உச்சிமாநாட்டில் சந்திக்க உள்ளனர்.
இதனிடையே, இந்த நேரத்தில் புதிய உறுப்பினர்களுக்கான திட்டங்கள் எதுவும் இல்லை," என்று வெள்ளை மாளிகையின் செய்தித்தொடர்பு செயலாளர் கரீன் ஜீன்-பியர் செய்தியாளர்களிடம் கூறினார்.குவாட்டின் பலத்தை உறுதிசெய்வதில் உறுப்பினர்கள், கவனம் செலுத்துகிறார்கள் என அவர் கூறினார்.
"இருப்பினும், குவாட் பரந்த அளவிலான இந்தோ-பசிபிக் கூட்டாளர்களுடன் பணிபுரியும் வாய்ப்புகளை வரவேற்கிறது., அதாவது கடல்சார் கள விழிப்புணர்வு குறித்த இந்தோ-பசிபிக் கூட்டாளிகள் மூலம், இது பிராந்தியத்தில் அதிநவீன கடல்சார் கள விழிப்புணர்வு தொழில்நுட்பத்தை வழங்குகிறது," என்று மேலும் அவர் கூறினார்.