கடவுள் ராமர் நேபாளி, இந்தியர் இல்லை - நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி
கடவுள் ராமர் நேபாளி, இந்தியர் இல்லை என்று நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி தெரிவித்துள்ளது சர்ச்சையை கிளப்பி உள்ளது.;
காத்மண்டு,
இந்தியாவில் உள்ள அனைத்து தனியார் செய்தி சேனல்கள் நேபாளத்தில் ஒளிபரப்பு செய்ய அந்தநாட்டு அரசு தடை விதித்துள்ளது. தூர்தர்ஷன் மட்டும் ஒளிபரப்பு செய்ய அனுமதி வழங்கியுள்ளது.
நேபாள நாட்டின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் தனியார் செய்தி சேனல்கள் செய்தி வெளியிடுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் நேபாள அரசு சார்பில் எந்தவிதமான அதிகாரபூர்வமான உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் உண்மையான அயோத்தி இந்தியாவில் இல்லை. நேபாளத்தில் உள்ளது. கடவுள் ராமர் நேபாளி. இந்தியர் இல்லை என நேபாள ஊடகங்களை மேற்கோள் காட்டி அந்நாட்டு பிரதமர் கே.பி. சர்மா ஒலி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.