அமெரிக்கா இந்தியாவை நேசிக்கிறது - டிரம்ப் டுவீட்
அமெரிக்கா இந்தியாவை நேசிக்கிறது என்று டொனால்டு டிரம்ப் கூறினார்.
வாஷிங்டன்,
அமெரிக்கா தனது 244-வது சுதந்திர தினத்தை ஜூலை 4-ம் தேதி நேற்று கொண்டாடியது. அமெரிக்க வரலாற்றிலேயே, ஜூலை 4 என்பது ஒரு மறக்க முடியாத நாளாகும். அன்றைய தினம்தான் 13 காலனிகள் மட்டுமே கொண்ட அமெரிக்கா பிரிட்டனிலிருந்து சுதந்திரம் பெறுவதாக அறிவித்தது.
இந்தநிலையில் 244-வது சுதந்திரதினத்தை கொண்டாடும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் அமெரிக்கா மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். மேலும்

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளாக, இந்த நாளில் சுதந்திரத்தையும் மனிதத்தையும் மதித்து கொண்டாடுகிறோம் என தெரிவித்திருந்தார்.இதற்கு பதில் அளித்த டிரம்ப், "நன்றி நண்பரே. அமெரிக்கா இந்தியாவை நேசிக்கிறது" என்று பிரதமர் மோடியின் டூவிட்டுக்கு பதிலளித்துள்ளார்.