சீனாவில் இருந்து வந்த ”பிளேக்”: கொரோனா குறித்து டிரம்ப் மீண்டும் விமர்சனம்

சீனாவில் இருந்து வந்த பிளேக் நோய்தான் கொரொனா வைரஸ் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் சாடியுள்ளார்.

Update: 2020-07-03 02:28 GMT
வாஷிங்டன் டிசி,

அமெரிக்காவில் கொரோனா வைரஸ்  தினம் தினம் புதிய உச்சத்தை எட்டி வருகிறது.  அந்நாட்டில் மொத்த பாதிப்பு 28,36,875 ஆக உள்ளது. அமெரிக்காவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸுக்கு சீனாவே காரணம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். வரும் நவம்பரில் அந்நாட்டில் அதிபர் தேர்தலும் நடக்க இருப்பதால், கொரோனா பிரச்சினை டிரம்பிற்கு பெரும் தலைவலியாக உள்ளது.

இந்த நிலையில், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த டிரம்ப் கூறியதாவது;- ''கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து வந்த பிளேக் நோய். கொரோனா வைரஸ் பரவாமல் சீனா தடுத்திருக்கலாம்.  ஆனால். சீன பரவ அனுமதித்து விட்டது.  சீனாவுடன் அந்த நேரத்தில் தான் நாங்கள் புதிதாக வணிக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தோம். கையெழுத்தான மையின் ஈரம் காய்வதற்கு  அது பரவிவிட்டது” என்றார்.  

மேலும் செய்திகள்