அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20,14,107 ஆக உயர்வு

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 20,14,107 ஆக உயர்ந்துள்ளது.

Update: 2020-06-08 18:30 GMT
வாஷிங்டன், 

சீனாவின் உகான் நகரில் உருவாகிய கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பரவி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும் தான் கொரோனா வைரஸ் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலக அளவில் கொரோனா தொற்றின் பாதிப்பு மற்றும் இறப்பு விகிதத்தில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. 

இந்நிலையில் அமெரிக்காவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 20 லட்சத்தை தாண்டி உள்ளது. அமெரிக்காவில் இன்று புதிதாக 6,658 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை தற்போது 20,14,107 ஆக உயர்ந்துள்ளது. அங்கு கொரோனா தொற்றுக்கு மேலும் 176 பேர் உயிரிழந்ததால், பலியானோர் எண்ணிக்கை 1,12,645  ஆக அதிகரித்துள்ளது. மேலும் அமெரிக்காவில், கொரோனா பாதிப்பிலிருந்து இதுவரை 7,63,303 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 


மேலும் செய்திகள்