மண்டல பூஜை

மண்டல பூஜை

Update: 2022-12-12 11:53 GMT

பல்லடம், 

பல்லடம் சந்தைப்பேட்டை அய்யப்பசாமி கோவிலில் 63-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு மண்டல பூஜை நடைபெற்றது. விழாவில் விநாயகர் பூஜை, சூக்தபாராயணம், மகாலட்சுமி ஹோமம், மகா சங்கல்பம், மற்றும் அய்யப்ப சுவாமிக்கு லட்சார்ச்சனை, மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அய்யப்பசாமியை வழிபட்டனர்.

மண்டல பூஜையை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது மண்டல பூஜை, சங்காபிசேக விழா நிறைவாக யானை வாகனத்தில் அய்யப்பசாமி திருவீதி உலா பல்லடம் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக நடைபெற்றது. 


Tags:    

மேலும் செய்திகள்