திருக்கோவிலூர்அரசு கலைக்கல்லூரியில் மண்டல அதிகாரி திடீர் ஆய்வு

திருக்கோவிலூர் அரசு கலைக்கல்லூரியில் மண்டல அதிகாரி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2023-05-26 18:45 GMT

திருக்கோவிலூர், 

திருக்கோவிலூர் சந்தைப்பேட்டையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு திருக்கோவிலூர் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகிறார்கள். இந்த நிலையில் இக்கல்லூரியில் நடப்பு கல்வியாண்டுக்கான முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு விரைவில் தொடங்க உள்ளது. இந்த நிலையில் வேலூர் மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் எழிலன் திருக்கோவிலூர் அரசு கலைக்கல்லூரியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர், கலந்தாய்வுக்கு வரும் மாணவர்களுக்கு குடிநீர், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என கல்லூரி முதல்வரிடம் அறிவுறுத்தினார். அப்போது கல்லூரி முதல்வர் ரவிசங்கர் மற்றும் கணினி அறிவியல் துறை தலைவர் சீனு, கல்லூரி கண்காணிப்பாளர் வள்ளி மற்றும் பேராசிரியர்கள், ஊழியர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்