திட்ட பணிகள் குறித்த மண்டல அளவிலான ஆய்வு கூட்டம்

மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அமைச்சர்கள் கயல்விழி செல்வராஜ் மற்றும் கே.ஆர்.பெரியகருப்பன் ஆகியோர் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தனர்.

Update: 2023-09-12 18:45 GMT

சிவகங்கை

மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அமைச்சர்கள் கயல்விழி செல்வராஜ் மற்றும் கே.ஆர்.பெரியகருப்பன் ஆகியோர் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தனர்.

ஆய்வு கூட்டம்

சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்று வரும் அரசின் திட்டபணிகள் குறித்த மண்டல அளவிலான ஆய்வு கூட்டம் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் ஆகியோர் தலைமையிலும், மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் மற்றும் எம்.எல்.ஏ. தமிழரசிரவிக்குமார் முன்னிலையில், பல்வேறு துறைகளைச் சார்ந்த அரசு அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டனர். இக்கூட்டத்தில் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டச் செயல்பாடுகள் குறித்து, துறை சார்ந்த அலுவலர்கள் புள்ளி விவரங்களுடன் விரிவாக எடுத்துரைத்தனர்.

ஆதிதிராவிடர் விடுதிகள்

இக்கூட்டத்தில், மயானம் மற்றும் மயான பாதை, இலவச வீட்டு மனை பட்டா, வன்கொடுமை தடுப்புச் சட்டம், அரசு ஆதிதிராவிடர் நல பள்ளிகள் விடுதிகளின் எண்ணிக்கை மற்றும் செயல்பாடுகள், மேம்படுத்த வேண்டிய வசதிகள், அரசு ஆதி திராவிட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் எண்ணிக்கை, அரசு ஆதி திராவிட பள்ளி, விடுதிகளில் பயின்ற மாணவர்களின் பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதங்கள் ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவராமன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் சிவக்குமார், மாவட்ட அளவிலான வன்கொடுமை விழிப்பு மற்றும் கண்காணிப்புக்குழு உறுப்பினர்கள் சேங்கைமாறன், பிச்சை, பொன்னுச்சாமி மற்றும் மாவட்ட அளவிலான ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர்கள் செல்வகுமார், .சேது, பூமிநாதன், முருகன் மற்றும் சிவகங்கை நகர் மன்றத்தலைவர் துரைஆனந்த், காஞ்சிரங்கால் ஊராட்சி மன்றத்தலைவர் மணிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நிவர்த்தி செய்ய நடவடிக்கை

பின்னர் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக அரசு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. அத்திட்ட செயல்பாடுகள் குறித்தும், மேம்படுத்த வேண்டிய பல்வேறு கட்டமைப்பு வசதிகள் குறித்தும் ஒவ்வொரு மாவட்ட வாரியாக துறை ரீதியாக பல்வேறு துறைகளைச் சார்ந்த அரசு அலுவலர்களை ஒருங்கிணைத்து மண்டல அளவிலான ஆய்வு கூட்டம் மற்றும் கள ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலுள்ள ஆதிதிராவிடர் அரசு பள்ளி-கல்லூரி மாணவர்கள் விடுதியின் செயல்பாடுகள் மற்றும் பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்தும் இக்கூட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது.

மேலும், இக்கூட்டத்தில் மாவட்ட அளவிலான ஆதிதிராவிட நலக்குழு மற்றம் மாவட்ட அளவிலான வன்கொடுமை விழிப்பு மற்றும் கண்காணிப்பு ஆகிய குழுக்களை சார்ந்தோர்கள் பல்வேறு கோரி்க்கைகள் குறித்து எடுத்துரைத்தனர். அவற்றை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்