மண்டல கூட்டுறவு இணைப்பதிவாளர் திடீர் ஆய்வு

மணிக்கிராமம் கூட்டுறவு வங்கியில் மண்டல கூட்டுறவு இணைப்பதிவாளர் திடீர் ஆய்வு செய்தார்

Update: 2023-05-10 18:45 GMT

திருவெண்காடு:

திருவெண்காடு அருகே மணிக்கிராமம் கூட்டுறவு வங்கியில் நேற்றுமுன்தினம் மயிலாடுதுறை மண்டல கூட்டுறவு இணைப்பதிவாளர் தயாள விநாயகன் அமுல்ராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது வங்கியில் விவசாயிகள், மகளிர் சுய உதவி குழுவினர், கால்நடை வளர்ப்போர், விவசாய தொழிலாளர்கள் ஆகியோருக்கு வங்கியின் மூலம் கடன் உதவி, பயிர் காப்பீடு பெற்று தருதல், வங்கி சேவை உள்ளிட்டவைகள் உரிய நபர்களுக்கு கிடைக்கிறதா என கேட்டறிந்தார். ஆய்வின்போது கூட்டுறவு சார்பதிவாளர் நடராஜன், கூட்டுறவு செயலாளர் பாஸ்கரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்