ரூ.1.75 கோடியில் ` பேவர் பிளாக்' சாலை அமைக்கும் பணி

ரூ.1.75 கோடியில் `ேபவர் பிளாக்' சாலை அமைக்கும் பணியை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்.

Update: 2023-04-22 19:01 GMT

ஆலங்குடி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் உள்ள கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2022-23-ம் ஆண்டிற்கான ரூ.1.75 கோடி மதிப்பீட்டில் காந்தி சாலை, படேல் நகர், ஆண்டிக்குளம், கண்ணகிதெரு, கம்பர்தெரு, இந்திரா நகர், நாடியம்மன் கோவில்தெரு ஆகிய 7 சாலைகளுக்கு பேவர் பிளாக் அமைக்கும் பணிக்கு ஒப்பந்தப்புள்ளி அறிவிக்கப்பட்டது. அம்பேத்கர் நகர் பகுதியில் ரூ.98 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணிகளை தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். ஆலங்குடி பேரூராட்சி தலைவர் ராசி முருகானந்தம் தலைமை தாங்கி அனைவரையும் வரவேற்றார். பேரூராட்சி துணை தலைவர் ராஜேஸ்வரி பழனிகுமார் முன்னிலை வகித்தார். அப்போது, ஆண்டிகுளத்தை சேர்ந்த மணிகண்டன் என்ற மாற்றுத்திறனாளிக்கு மூன்று சக்கர வாகனம் வழங்கவும், செவித்திறன் குறைபாடுடைய மாலதி என்ற மூதாட்டி காதொலி கருவி கோரி அமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்தனர். இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுத்த அமைச்சர், மூன்று சக்கர வாகனமும், காதொலி கருவியும் வழங்கினார். இதனைத்தொடர்ந்து, நெம்மக்கோட்டை கருப்பர், காளியம்மன் கோவில் பாலாலயத்தில் கலந்து கொண்டார். மேலும், வடகாடு முக்கம் பஸ் நிறுத்தம் அருகே தி.மு.க. திருவரங்குளம் மேற்கு ஒன்றியம் சார்பில் அமைக்கப்பட்ட கோடைகால தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியையும் அடிக்கல் நாட்டி அமைச்சர் தொடங்கி வைத்தார். இதில் ஆலங்குடி நகர செயலாளர் பழனிகுமார் மற்றும் 15 கவுன்சிலர்கள் உள்பட தி.மு.க. நகர, ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்