மதுவிற்ற வாலிபர் கைது

மதுவிற்ற வாலிபர் கைதுசெய்யப்பட்டார்.

Update: 2023-07-08 19:36 GMT

ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி, சப்-இன்ஸ்பெக்டர்கள் சீனிவாசன், பிரபு மற்றும் போலீசார் ஜோலார்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது பொன்னேரி பகுதியில் மதுபாட்டில்கள் மறைத்து வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர். அப்போது பொன்னேரி காலனி பகுதியை சேர்ந்த விஸ்வநாதன் மகன் வில்லழகன் (வயது 33) என்பவர் தனது வீட்டின் பின்புறம் மதுபாட்டில்களை மறைத்து வைத்து விற்பனை செய்த போது கையும் களவுமாக பிடித்து போலீசார் கைது செய்தனர்.

மேலும் அவரிடம் இருந்து 25 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்