ரேஷன் அரிசி கடத்திய வாலிபர் கைது
ரேஷன் அரிசி கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
நெல்லை உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா மற்றும் போலீசார் நேற்று ஆலங்குளம் பாவூர்சத்திரம் பகுதிகளில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது மேலப்பாவூரில் இருந்து பாவூர்சத்திரம் மெயின் ரோடு செல்லும் சாலையில் வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த காரில் 800 கிலோ ரேஷன் அரிசி கடத்திவரப்பட்டது தெரிய வந்தது. இதனையடுத்து காரை ஓட்டி வந்த சுந்தரபாண்டியபுரம் புதுத்தெருவை சேர்ந்த வேலுச்சாமி மகன் கணேசன் (வயது 35) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரேஷன் அரிசி மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது. கணேசன் கீழப்பாவூர் சுற்றுவட்டார பகுதிகளில் ரேஷன் அரிசிகளை வாங்கி அதை வட மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.