திருமணம் செய்ய மறுத்த வாலிபர் கைது
வேதாரண்யம் அருகே, பெண்ணை காதலித்து விட்டு திருமணம் செய்ய மறுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுக்கா வேட்டைக்காரனிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது28). இவரும் அதே பகுதியை சேர்ந்த 27 வயதான பெண் ஒருவர் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.இந்த நிலையில் அந்த பெண் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என மணிகண்டனிடம் கேட்டுள்ளார். இதற்கு அவர் மறுத்துள்ளார். இதுகுறித்து அந்த பெண் வேதாரண்யம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பசுபதி, சப்-இன்ஸ்பெக்டர் சுகந்தி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.