போக்சோ வழக்கில் தேடப்பட்ட வாலிபர் கைது

போக்சோ வழக்கில் தேடப்பட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-11-08 19:29 GMT

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பையூர் ஏரிக்கரை பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 27). இவர் பொருட்காட்சியில் ராட்டினம் சுற்றும் தொழில் செய்து வந்தார். பொருட்காட்சியில் ராட்டினம் சுற்றுவதற்காக நெல்லைக்கு வந்த அவர், ஒரு சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பின்னர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார்.

இதுதொடர்பாக அந்த சிறுமி அளித்த புகாரின் பேரில் கடந்த 2019-ம் ஆண்டு நெல்லை போலீசார் இவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த கணேசனை நேற்று முன்தினம் நெல்லை சந்திப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மோகன் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்