இளைஞர்கள் பயிற்சி பாசறை கூட்டம்
சாத்தூரில் இளைஞர்கள் பயிற்சி பாசறை கூட்டம் நடைபெற்றது.
சாத்தூர்,
சாத்தூரில் தி.மு.க. சார்பில் இளைஞர்கள் பயிற்சி பட்டறை கூட்டம் நடைபெற்றது. விருதுநகர் தெற்கு மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள் கலந்து கொண்ட பயிற்சி பாசறை கூட்டத்திற்கு அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார்.
இதில் திருச்சி சிவா எம்.பி. கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகள் லட்சியவாதிகளாக மாற்றத்தான் இந்த கூட்டம். 1980-ல் மதுரையில் இளைஞர் அணி தொடங்கப்பட்டது. இன்று லட்சக்கணக்கான இளைஞர்கள் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
இதில் எம்.எல்.ஏ. தாயகம் கவி, தென் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் எம்.பி. தனுஷ்குமார், சாத்தூர் நகர்மன்ற தலைவர் குருசாமி, ஊராட்சி ஒன்றிய தலைவர் நிர்மலா கடற்கரைராஜ், ஒன்றிய செயலாளர்கள் கடற்கரைராஜ், முருகேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.