சாராயம் கடத்திய வாலிபர் கைது

சங்கராபுரம் அருகே சாராயம் கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டாா்.

Update: 2022-10-29 18:45 GMT

சங்கராபுரம்:

சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் ரோந்துப்பணி மேற்கொண்டனர். அப்போது கொசப்பாடி ஏரிக்கரை வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் இருந்த லாரி டியூப்பில் 55 லிட்டர் சாராயம் இருந்தது. விசாரணையில் அவர், புதுப்பாலப்பட்டு கிராமத்தை சேர்ந்த சக்திவேல்(வயது 23) என்பதும், சாராயத்தை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்