இளைஞர் திறன் பயிற்சி விழா

பெரணமல்லூரில் இளைஞர் திறன் பயிற்சி விழா நடந்தது.

Update: 2022-11-18 16:39 GMT

சேத்துப்பட்டு

பெரணமல்லூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் தீன்தயாள் உபாத்யாயா கிராமின் கவுசல்யா போஜனா திட்டத்தின் கீழ் இளைஞர் திறன் பயிற்சி திருவிழா நடந்தது.

பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மோகனசுந்தரம், வெங்கடேசன், தலைமை ஆசிரியர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட இயக்கம் மேலாண்மை உதவி திட்ட அலுவலர் சகாயம் வில்லியம்ஸ் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக மாவட்ட வாழ்வாதார இயக்க மேலாண்மை குழு அழகு சையத் சுலைமான் தலைமை தாங்கி பேசினார்.

வாழ்வாதார பயிற்சி 140 பேருக்கும் மற்றும் பயிற்சி முடிந்த 29 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் திராவிட உதவி மேலாளர் ஜெயசுதா, வீட்டு வசதி நலஅலுவலர் தனகீர்த்தி. மாவட்ட திறன் மேம்பாட்டு கழகம் உதவி இயக்குனர் சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முடிவில் வட்டார வாழ்வாதார இயக்க மேலாளர் எஸ்.திலகவதி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்