இளையோர் செஞ்சிலுவை சங்க கூட்டம்

இளையோர் செஞ்சிலுவை சங்க கூட்டம் பெரம்பலூரில் நடைபெற்றது.

Update: 2023-07-20 19:13 GMT

இளையோர் செஞ்சிலுவை அமைப்பின் 2023-2024-ம் ஆண்டுக்கான செயல்பாடுகளை பள்ளிகளில் செயல்படுத்திடும் வகையிலான முதல் பருவக்கூட்டம் பெரம்பலூர் சாரண- சாரணியர் கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மணிவண்ணன் தலைமை தாங்கி பேசினார். மாவட்ட கன்வீனர் ராதாகிருஷ்ணன் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து பேசினார். மாவட்ட கல்வி அலுவலர் கலைச்செல்வி, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் அண்ணாதுரை மற்றும் மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை மற்றும் தனியார், மெட்ரிக் பள்ளிகளிலிருந்து 148 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்