சிவகாசி
சிவகாசி தாலுகாவில் உள்ள பாரைப்பட்டியை சேர்ந்தவர் பாலகுருசாமி (வயது 57). இவரது மகன் சிவக்குமார்(22). இவர் டிப்பர் லாரியில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று பேராப்பட்டியில் உள்ள பாலமுருகன் என்பவரின் கட்டிட பணிக்கு எம்.சாண்ட் கொண்டு சென்றுள்ளார். பின்னர் அங்கு எம்.சாண்டை கீழே கொண்டும்போது லாரியின் ஒரு பகுதி அந்த வழியாக சென்ற மின்கம்பியில் உரசியதாக கூறப்படுகிறது. இதில் மின்சாரம் தாக்கி சிவக்குமார் தூக்கி வீசப்பட்டார். பின்னர் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், சிவக்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.