மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
மின்சாரம் தாக்கி வாலிபர் பரிதாமாக இறந்தார்.
காரியாபட்டி,
திருச்சுழி அருகே குலசேகரநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது 36). இவர் அதே ஊரை சேர்ந்த ஒருவரின் வீட்டில் லைட் போட்டுவிட்டு அதற்கு மின் இணைப்பு கொடுத்தார். அப்போது கண்ணன் மீது மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டார். இதில் காயமடைந்த கண்ணனை அருகில் இருந்தவர்கள் மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு கண்ணனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து திருச்சுழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.