மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
பண்ருட்டி அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்தார்.
பண்ருட்டி,
பண்ருட்டி அடுத்த கணிசப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை மகன் சிவராஜ்(வயது 18). நேற்று பெய்த மழையால் வீட்டின் பின்புறம் சேறும், சகதியுமாக இருந்தது. இந்த நிலையில் சிவராஜ், குளித்து விட்டு வந்தபோது, கால் சறுக்கி கீழே விழுந்தார். அப்போது அருகில் இருந்த எர்த் கம்பியை பிடித்தபோது சிவராஜ் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.