மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி

மின்சாரம் பாய்ந்து வாலிபர் உயிரிழந்தார்.

Update: 2022-07-23 20:02 GMT

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, திருமாந்துறை காமராஜர் நகரை சேர்ந்தவர் சன்னாசி. இவரது மகன் பாலா (வயது 23). இவர் தனியார் நிறுவன ஓட்டல் பராமரிப்பு பணியில், ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வந்தார். நேற்று மாலை பாலா திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், சின்னாறு பகுதியில் உள்ள ஒரு ஓட்டலின் பின்புறம் வயரிங் வேலை பார்த்து கொண்டிருந்தார்.

அப்போது உயர் மின்னழுத்த கம்பி தலையில் உரசியதில் மின்சாரம் பாய்ந்து பாலா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த மங்களமேடு போலீசார், சம்பவ இடத்துக்கு வந்து பாலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்