வரதட்சணை கொடுமை வழக்கில் வாலிபருக்கு ஓராண்டு ஜெயில்

வரதட்சணை கொடுமை வழக்கில் வாலிபருக்கு ஓராண்டு ஜெயில் தண்டனை விதித்து அம்பை கோர்ட்டு தீர்ப்பளித்தது.

Update: 2023-02-10 19:38 GMT

அம்பை:

அம்பை அருகே உள்ள மேல ஏர்மாள்புரம், நடுத்தெருவை சேர்ந்தவர் முத்து (வயது 32). இவருக்கும், மன்னார் கோவில் பகுதியை சேர்ந்த வினிதா (32) என்பவருக்கும் கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் முத்து அடிக்கடி வினிதாவிடம் தகராறு செய்து வரதட்சணை கொடுமைப்படுத்தி வந்துள்ளார். மேலும் வினிதாவின் நகைகளை ஏமாற்றி பெற்றுக்கொண்டு மோசடி செய்துள்ளார். பின்னர் வேறொரு பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். இதனை தட்டிக் கேட்ட வினிதாவை அவதூறாக பேசி மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அம்பை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் வினிதா புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் முத்து மீது வரதட்சணை தடுப்புச் சட்ட பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு அம்பை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பல்கலைசெல்வன், குற்றம் சாட்டப்பட்ட முத்துவிற்கு ஒரு ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்