வழிப்பறிகொள்ளையில் ஈடுபட்ட வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
கண்டாச்சிபுரம் அருகே வழிப்பறிகொள்ளையில் ஈடுபட்ட வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
விழுப்புரம்
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே ஓடுவன்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் பாவாடைராயன்(வயது 31). இவர் மீது வழிப்பறி கொள்ளை உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரது குற்ற செயலை தடுக்கும் வகையில் பாவாடைராயனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட கலெக்டருக்கு போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா பரிந்துரை செய்தார். இதை ஏற்று கலெக்டர் மோகன் உத்தரவின் பேரில் பாவாடைராயனை போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.