மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது

ஆம்பூர் அருகே மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 7 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2023-10-21 17:07 GMT

ஆம்பூர்

ஆம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பந்தமாக போலீசருக்கு புகார்கள் வந்தன. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில் ஆந்திர மாநிலம் அர்மணிபெண்டா பகுதியை சேர்ந்த திருமலை (வயது 26) என்பவர் ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்ம் 7 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்