சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அண்ணனுக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அண்ணனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தஞ்சை போக்சோ கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

Update: 2023-06-02 20:28 GMT

தஞ்சாவூர்;

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அண்ணனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தஞ்சை போக்சோ கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

சிறுமிக்கு பாலியல் தொல்லை

தஞ்சை மாவட்டம் திருவையாறை அடுத்த விளாங்குடியை சேர்ந்தவர் மதியழகன். இவருடைய மகன் ஆனந்தராஜ்(வயது 27). இவர் தனது உறவினர் மகளான தங்கை முறையான 17 வயது சிறுமியுடன் பழகி வந்துள்ளார்.மேலும் சிறுமியிடம் காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறியும், திருமணம் செய்வதாக கூறியும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும் சிறுமியை வீட்டில் இருந்து அழைத்துச்சென்றும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

கைது

இந்த நிலையில் சிறுமியின் தாயார், தனது மகளை காணவில்லை என திருவையாறு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.விசாரணையில், சிறுமியை ஆனந்தராஜ் அழைத்துச்சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக தகவல் கிடைத்ததையடுத்து இந்த வழக்கு திருவையாறு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. அதன் பேரில் அப்போதைய இன்ஸ்பெக்டர் மணமல்லி, போக்சோ சட்டத்தின் கீழ் ஆனந்தராஜை கைது செய்தார்.

20 ஆண்டுகள் சிறை

இந்த வழக்கு தஞ்சை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. ஆனந்தராஜூக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சுந்தர்ராஜன் தீர்ப்பளித்தார்.இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சசிரேகா ஆஜரானார்.

Tags:    

மேலும் செய்திகள்