ஜல்லிக்கட்டு காளையை விற்றதால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

ஜல்லிக்கட்டு காளையை விற்றதால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-07-08 18:44 GMT

திருவரங்குளம் அருகே உள்ள திருக்கட்டளையை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகன் நரேந்திர குமார் (வயது 22). இவர் நேற்று முன்தினம் இரவு மாங்கனாம்பட்டி கோவில் வனப்பகுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த கணேஷ் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் தான் வளர்த்து வந்த ஜல்லிக்கட்டு காளையை அவரது தந்தை விற்பனை செய்ததால் விரக்தியில் நரேந்திர குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

Tags:    

மேலும் செய்திகள்