சோழவரம் அருகே ஏரி கரையில் வாலிபர் வெட்டிக்கொலை - 3 பேர் கைது

சோழவரம் அருகே ஏரிக் கரையில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளர்.;

Update: 2023-06-22 10:42 GMT

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த சோழவரம் அருகே பூதூர் கிராமம் உள்ளது. நேற்று இந்த கிராமத்தில் உள்ள ஏரி கரையில் 25 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டு கிடப்பதாக சோழவரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அங்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைகாக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணை கொலை செய்யப்பட்ட நபர் பெரியபாளையம் கிராமத்தை சேர்ந்த தண்டுமா நகரில் வசிக்கும் பிரவீன் (வயது 25) என்பது தெரிய வந்தது

பெரியபாளையம் பகுதியை சேர்ந்த குணா கஞ்சா விற்பனை செய்து வருவதாகவும், அவரிடம் அதே பகுதியை சேர்ந்த கிஷோர் (25), ராளபாடி தினேஷ் (26), அரிப்பாக்கம் கோகுல் (21) ஆகியோர் மாமூல் கேட்டு தொல்லை கொடுத்ததாகவும் அதனை பிரவீன் தட்டிக் கேட்டதாகவும் தெரிகிறது. எனவே கிஷோர், தினேஷ், கோகுல் ஆகியோர் பிரவீனை கொலை செய்ய திட்டமிட்டு தங்களுடன் மது அருந்த வருமாறு பூதூர் ஏரிக்கு அழைத்து சென்றனர். அங்கு பிரவீனை பட்டாக்கத்திகளால் வெட்டி கொன்று விட்டு 3 பேரும் தப்பியதாக விசாரணையில் தெரிய வந்தது.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரவீனை கொலை செய்த கிஷோர், தினேஷ், கோகுல் 3 பேரை கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். ஏரிக்கரை ஓரத்தில் வாலிபர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்