சரவணப்பொய்கையில் மூழ்கி வாலிபர் சாவு
சரவணப்பொய்கையில் மூழ்கி வாலிபர் இறந்தார்.
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் ராஜீவ்காந்தி நகர் முதல் தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் கோபி(வயது 22). இவர்கடந்த 3 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்று உள்ளார். இந்த நிலையில் நேற்று காலையில் திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கையின் நீரில் பிணமாக கோபி மிதந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த திருப்பரங்குன்றம் போலீசார் மற்றும் மதுரை தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.