இளைஞர் காங்கிரஸ் செயலாளா் பலி

நிலக்கோட்டையில், மோட்டார் சைக்கிள்கள் நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தில் இளைஞர் காங்கிரஸ் செயலாளர் பலியானார்.

Update: 2023-02-16 16:51 GMT

இளைஞர் காங்கிரஸ் செயலாளர்

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை இ.பி. காலனியை சேர்ந்தவர் கவுதம் (வயது 28). இவர், இளைஞர் காங்கிரஸ் கட்சியின் நிலக்கோட்டை நகர செயலாளராக இருந்தார். மேலும் நிலக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் ஓட்டுனர் பயிற்சி பள்ளியில் பயிற்சி ஆசிரியராகவும் கவுதம் பணிபுரிந்தார்.

நேற்று முன்தினம் இவர், வேலை நிமித்தமாக வத்தலக்குண்டு வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு சென்றார். பின்னர் இரவில் வத்தலக்குண்டுவில் இருந்து நிலக்கோட்டை நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் திரும்பி கொண்டிருந்தார்.

இதேபோல் நிலக்கோட்டை கிருஷ்ணாநகரை சேர்ந்த முத்து (24) என்பவர், நிலக்கோட்டையில் இருந்து வத்தலக்குண்டு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

பலி-போலீஸ் நிலையம் முற்றுகை

நிலக்கோட்டையில், வத்தலக்குண்டு சாலையில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகே வந்தபோது 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்குநேர் மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட கவுதம் படுகாயம் அடைந்தார்.

அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே கவுதம் இறந்து விட்டதாக தெரிவித்தனர். விபத்தில் சிக்கிய முத்து லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

விபத்து குறித்து தகவல் அறிந்த கவுதமின் உறவினர்கள், நிலக்கோட்டை போலீஸ் நிலையத்தில் குவிந்தனர். விபத்தை ஏற்படுத்திய முத்துவை கைது செய்ய வலியுறுத்தி போலீஸ் நிலையத்தை அவர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து போலீசார் அவர்களை சமரசம் செய்ததையடுத்து, அங்கிருந்து கவுதமின் உறவினர்கள் கலைந்து சென்றனர். இதற்கிடையே விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துவை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்