கந்து வட்டி கொடுமையால் வாலிபர் தற்கொலை

சிவகாசி அருகே கந்து வட்டி கொடுமையால் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-09-17 18:45 GMT

சிவகாசி

சிவகாசி அருகே கந்து வட்டி கொடுமையால் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கந்து வட்டி கொடுமை

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் முத்துமாரி நகரைச் சேர்ந்தவர் பிரகாஷ்ராஜ் (வயது 26). கோவையில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் தனது குடும்பத்திற்காக தெரிந்த நபர்களிடம் கடன் வாங்கி கொடுத்துள்ளார். இந்த நிலையில் கடன் கொடுத்தவர்கள் வட்டிப்பணம் கேட்டு நேரிலும், போனிலும் தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் ஊருக்கு வந்திருந்த பிரகாஷ்ராஜ் மன வேதனை அடைந்து வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு தனது தந்தைக்கு செல்போனில் கடன் கொடுத்தவர்களின் தொந்தரவு தாங்க முடியவில்லை, எனது சாவிற்கு கடன் கொடுத்தவர்கள் தான் காரணம் என வீடியோ மற்றும் ஆடியோ பதிவினை அனுப்பி உள்ளார்.

2 பேர் கைது

இதுகுறித்து பிரகாஷ்ராஜின் தாயார் சீதா (50) திருத்தங்கல் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் முத்துமாரி நகரை சேர்ந்த மாணிக்கம்(29), கருப்பசாமி(29), செல்வவிநாயகர் காலனி சேர்ந்த லட்சுமி மற்றும் தமிழ்ச்செல்வி ஆகிய 4 பேர் மீதும் கந்து வட்டி கொடுமை சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து மாணிக்கம், கருப்பசாமியை கைது செய்தனர். மற்ற இருவரையும் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்