தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்
மதுரை அவனியாபுரம் வெள்ளைக்கல் கிழக்கு தெருவை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 36). மதுகுடிக்கும் பழக்கத்துக்கு அடிமையான இவர் அதனை விட முடியாமல் சில தினங்களாக மன அழுத்தத்தில் இருந்து வந்தார். சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த அவர் திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் அவனியாபுரம் போலீசார் வாக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.