கபிஸ்தலம் அருகே உள்ள பின்னமரத்து பிள்ளையார் கோவில் தெருவில் வசிப்பவர் முருகன். இவரது மகன் பரணி (வயது23). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இவர் வெளிநாடு சென்று விட்டு, தற்போது சொந்த ஊருக்கு திரும்பினார். இந்தநிலையில் பரணி வெளிநாட்டில் 2 வருடமாக ேவலைபார்த்தும் பணம் சம்பாதிக்க முடியவில்லையே என மனவேதனையில் இருந்துள்ளார். நேற்று கபிஸ்தலம் காவிரி படுகை பகுதியில் உள்ள வயலில் தேக்குமரத்தில் பரணி தூக்குப்போட்டு தற்கொலை கொண்டார். இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் உடனடியாக கபிஸ்தலம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) பாபநாசம் கலைவாணி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பரணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு பாபநாசம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து முருகன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.