தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-01-08 19:25 GMT

சிவகாசி, 

நேபாளத்தை சேர்ந்தவர் ஜீவன்பகதூர்சிங் (வயது 29). இவர் தனது குடும்பத்துடன் சிவகாசி முத்துராமலிங்கபுரம் காலனியில் தங்கி அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். ஜீவன்பகதூர்சிங்கிற்கும், அவரது மனைவி சந்தோஷிதேவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று வேலை முடிந்து வீட்டிற்கு வந்த ஜீவன்பகதூர்சிங் வழக்கம் போல் குடித்துவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் கணவருக்கு உணவு வாங்க அவரது மனைவி வெளியே சென்றுள்ளார். அப்போது ஜீவன் பகதூர்சிங் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வீட்டின் உரிமையாளர் ஆறுமுகம் கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்