சிங்காநல்லூர்
கோவை சிங்காநல்லூர் மேற்கு அக்ரகார பகுதியை சேர்ந்தவர் நாராயணன்(வயது 49). இவர் டிரான்ஸ்போர்ட் நிறுவனம் நடத்தி வருகிறார். இவருடைய மகன் அஜய் கண்ணன்(22), அந்த நிறுவனத்தை கவனித்து வந்தார். இந்த நிலையில் நிறுவனத்துக்கு வரக்கூடிய பணத்தை அஜய் கண்ணன் வசூலிக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் நாராயணன் தனது மகனை திட்டியதாக தெரிகிறது.
இதன் காரணமாக மனமுடைந்த அஜய் கண்ணன், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.