தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

பகண்டைகூட்டுரோடு அருகே தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-11-27 19:21 GMT

ரிஷிவந்தியம், 

கள்ளக்குறிச்சி அருேக காரனூர் கிராமத்தை சேர்ந்தவர் பூமாலை மகன் செந்தில் (35). இவரது மனைவி அருள்மணி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். செந்தில் குடும்பத்தினருடன் பகண்டை கூட்டுரோடு அருகே அரியலூர் கிராமத்தில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த செந்தில் கடந்த 6 மாதங்களுக்கு முன் சொந்த ஊருக்கு வந்தார். இந்த நிலையில் அவரது உடல் திடீரென பாதிக்கப்பட்டது. இதற்காக தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்றார். இந்நிலையில் மீண்டும் வெளிநாட்டுக்கு செல்ல இருப்பதாக செந்தில் தனது மனைவி அருள்மணியிடம் தெரிவித்துள்ளார் இதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் கணவன்-மனைவிேய இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த செந்தில் வீட்டின் அருகே உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் பகண்டைகூட்டுரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்