தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
சிவகாசி,
சிவகாசி அருகே உள்ள மீனம்பட்டியை சேர்ந்தவர் பழனிவேல். இவரது மகன் சக்திவேல் (வயது 20). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பழனிவேல் இறந்து விட்ட நிலையில் சக்திவேல் தனது தாய் சுப்புதாயுடன் வசித்து வந்தார். இந்தநிலையில் தாயும், மகனும் பட்டாசு ஆலையில் வேலை செய்து வந்தனர். தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி சக்திவேல், தாய் சுப்புதாயிடம் வற்புறுத்தி வந்துள்ளார். இதை தொடர்ந்து சுப்புதாய் பல்வேறு இடங்களில் தனது மகனுக்கு, பெண் பார்த்துள்ளார். ஆனால் நல்ல வரன் அமையவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தனக்கு திருமணம் ஆக வில்லை என்ற விரக்தியில் சக்திவேல் சம்பவத்தன்று வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார். அருகில் இருந்தவர்கள் உதவியுடன் சக்திவேலை மீட்டு சிவகாசியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சுப்பு தாய் கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.