தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

உளுந்தூர்பேட்டை அருகே தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

Update: 2023-07-07 18:45 GMT

உளுந்தூர்பேட்டை

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள புள்ளூர் கிராமத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி மகன் மணிகண்டன்(வயது 35). இவரது மனைவி சூர்யா. இவர்களுக்கு திருமணம் ஆகி 13 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை. மணிகண்டன் சில மாதங்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டு இருந்து வந்த நிலையில் தினமும் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த வண்ணம் இருந்தார். இதனால் ஆத்திரமடைந்து மணிகண்டனை சூர்யா கண்டித்ததாக தெரிகிறது. இதில் மனமுடைந்த அவர் வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி மற்றும் அக்கம் பக்கத்தினர் மணிகண்டனை மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் எடைக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்