தூத்துக்குடி அருகே வாலிபர் அடித்துக்கொலை

தூத்துக்குடி அருகே வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்டார்.;

Update: 2022-06-21 15:34 GMT

ஸ்பிக்நகர்:

தூத்துக்குடி அருகே வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்டார்.

வாலிபர் பிணம்

தூத்துக்குடி முள்ளக்காடு அருகே ஒரு தனியார் குடோன் உள்ளது. இந்த குடோன் தற்போது மூடப்பட்டு கிடக்கிறது. இந்த குடோனில் ஒரு வாலிபர் பிணம் கிடப்பதாக முத்தையாபுரம் போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதன்பேரில் முத்தையாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசீலன், சப்-இன்ஸ்பெக்டர் மகாராஜன், தாளமுத்துநகர் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில், இறந்து கிடந்தவர் தூத்துக்குடியை சேர்ந்த முகம்மது அலி மகன் முகம்மது ரியாஸ் (வயது 22) என்று தெரியவந்தது.

கொலை

இறந்து கிடந்த முகம்மது ரியாஸ் அருகில் தண்ணீர் பாட்டில் கிடந்தது. இதில் துப்புதுலக்க மோப்ப நாய் கோக்கோ வரவழைக்கப்பட்டது. அந்த நாய் குடோனில் மோப்பம் பிடித்து விட்டு தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலை வரை சென்று திரும்பியது. அதைத்தொடர்ந்து தடய அறிவியல் உதவி இயக்குனர் கலா லட்சுமி வந்து தடயங்களை ஆய்வு செய்தார்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், நண்பருடன் ஏற்பட்ட தகராறில் முகம்மது ரியாஸ் அடித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.

காரணம் என்ன?

கொலை செய்யப்பட்ட முகம்மது ரியாஸ் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபரை கொலை செய்தது யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

மூடிக்கிடக்கும் குடோனில் வாலிபர் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

---------------------

Tags:    

மேலும் செய்திகள்