போலீஸ் நிலையத்தில் வாலிபர் தற்கொலை முயற்சி

போலீஸ் நிலையத்தில் வாலிபர் தற்கொலைக்கு முயன்றார்.;

Update: 2023-02-17 20:16 GMT

ராஜபாளையம்

ராஜபாளையம் அரசு மருத்துவமனை முன்பு தகராறு நடப்பதாக வடக்கு போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அரசு மருத்துவமனை முன்பு ஒருவர், மற்றொரு வாலிபருடன் தகராறு செய்து கொண்டிருந்தார். தகராறில் ஈடுபட்ட 23 வயது வாலிபரை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். பின்னர் 23 வயது வாலிபரை போலீஸ் நிலையத்தில் அமர வைத்து விட்டு மீண்டும் ரோந்து பணிக்கு சென்று விட்டனர். அப்போது அங்கு ஒரு போலீசார் மட்டும் அறையில் இருந்துள்ளார். இந்தநிலையில் சிறிது நேரத்தில் அந்த வாலிபர் தனது கழுத்தில் அணிந்திருந்த டாலரின் சிறு கத்தியை எடுத்து கழுத்து மார்பு கைகளில் கிழித்துக்கொண்டு சத்தம் போட்டு உள்ளார். இதை கேட்ட பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஓடி வந்து பார்த்தார். அப்போது கத்தியை வைத்து மேலும் உடலில் காயம் ஏற்படுத்த முயற்சி செய்து உள்ளார். அவரை தடுத்த போலீசார் அவர் வைத்திருந்த கத்தியை பிடுங்கி அவரை எச்சரித்து அமர வைத்துள்ளார். பின்னர் அவரை சிகிச்சைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்