வாலிபர் மீது தாக்குதல்

மது குடிக்க பணம் தராததால் வாலிபர் மீது தாக்குதல் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது

Update: 2022-07-02 17:37 GMT

மயிலாடுதுறை:

மயிலாடுதுறை திருவிழந்தூர் பொட்டவெளித் தெருவை சேர்ந்தவர் சேகர் மகன் செந்தில் (வயது 35). இவர் வீட்டின் அருகே கீற்று முடையும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது அங்கு வந்த மயிலாடுதுறை கலைஞர் காலனி தெருவை சேர்ந்த ஏங்கெல்ஸ், ஜெயசீலன், அம்பேத்கர் தெருவை சேர்ந்த முத்துவேல் ஆகிய 3 பேர், செந்திலிடம் மதுகுடிக்க பணம் கேட்டுள்ளனர். அதற்கு அவர் தன்னிடம் பணம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த 3 பேரும் சேர்ந்து செந்திலை உருட்டு கட்டையால் தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த அவர் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து செந்தில் கொடுத்த புகாரின்பேரில் ஏங்கெல்ஸ், ஜெயசீலன், முத்துவேல் ஆகிய 3 பேர் மீது மயிலாடுதுறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அறிவழகன் மற்றும் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்