கத்தியுடன் வாலிபர் கைது

கத்தியுடன் வாலிபர் கைது செய்யப்பட்டார்

Update: 2022-11-26 19:29 GMT

திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் பானாங்குளம் கண்மாய் பகுதியில் ஒரு வாலிபர் கத்தியுடன் சுற்றுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் விரைந்து அந்த வாலிபரை மடக்கிபிடித்து திருப்பரங்குன்றம் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரணை செய்தனர். அதில் தென்பரங்குன்றத்தை சேர்ந்த தீனா (வயது 25) என்று தெரியவந்தது. இதனையடுத்து தீனாவை கைது செய்து அவரிடம் இருந்து கத்தியை பறிமுதல் செய்து விசாரணை செய்துவருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்