நுங்கம்பாக்கத்தில் கஞ்சாவுடன் வாலிபர் கைது

நுங்கம்பாக்கத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2022-12-04 08:39 GMT

சென்னை நுங்கம்பாக்கம் மகாலிங்கபுரம் மெயின் ரோட்டில் வாலிபர் ஒருவர் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருப்பதாக நுங்கம்பாக்கம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்று கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த வாலிபரை பிடித்தனர். விசாரணையில் அவர் ஊரப்பாக்கம் பகுதியை சேர்ந்த விக்னேஷ் (வயது 24) என்பது தெரிய வந்தது. அவரிடம் இருந்து 1 கிலோ கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்

Tags:    

மேலும் செய்திகள்